சென்னை, ஜன. 29– தை அமாவாசையான இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் முன்னோர்களின் […]