செய்திகள்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மம்தா தர்ணா போராட்டம்

கொல்கத்தா, ஏப். 13– தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா பானர்ஜி காந்தி சிலை முன்னர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளது. மேலும் 5 வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதரீதியாக வாக்கு சேகரிப்பில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார் என்று, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 24 மணி நேரம் தேர்தல் பரப்புரை […]

செய்திகள்

நடந்து வந்து வாக்களித்த நடிகர் விக்ரம்

சென்னை, ஏப். 6– சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை நடந்து வந்த நடிகர் விக்ரம், இயந்திர கோளாறு காரணமாக, காத்திருந்து வாக்களித்துள்ளார். தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும், காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரி அனைவரும் வரிசையில் […]

செய்திகள்

திருப்பி அனுப்பப்பட்ட உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த வாக்காளர்கள்: மாலை 6 மணிக்கு வந்து வாக்களிக்க வாய்ப்பு

சென்னை, ஏப்.6- வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த வாக்காளர்கள் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர், மீண்டும் அவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா பீதிக்கு மத்தியில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலின்போது கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை […]

செய்திகள்

அதிகளவில் ஓட்டுப்போடுங்கள்: பிரதமர் மோடி தமிழில் டுவிட்

புதுடெல்லி, ஏப்.6– தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தலில் அதிகளவில் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதேபோல் அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் 3ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து […]

செய்திகள்

சைக்கிளில் வந்து வாக்கு அளித்த நடிகர் விஜய்

சென்னை, ஏப்.6– சென்னை நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கருத்தை மக்களுக்கு தெரிவிக்கவும், வாக்களிப்பது கட்டாயம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்தார். பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே சைக்கிளில் வந்ததாக அவரது ரசிகர் மன்றம் […]

செய்திகள்

புதுச்சேரியில் 11 மணிக்கு 20.07 சதவீத வாக்குப்பதிவு

புதுவை, ஏப். 6– புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 20.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,558 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக 1,558 வாக்குச் சாவடிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்தத் தோதலில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, கூடுதலாக 606 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 30 […]

செய்திகள்

உடல் நலக்குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஏப்.6- நடிகர் கார்த்திக் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக், கடந்த 2 வாரத்துக்கு முன்பு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள […]

நாடும் நடப்பும்

மீண்டும் மொழி, இன பிரிவினை: தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க ஸ்டாலின் சதி

தி.மு.க.வின் அச்சடிப்புகள் வட மாநிலத்தில் மட்டுமே, அது ஏன்? பாதிக்கப்பட்ட உள்ளூர் அச்சகர்கள் குமுறல்! தமிழகத்தில் தமிழருக்கே வேலை… இந்தி மொழி பேசியபடி பான்பராக் மென்று துப்புபவர்கள்… என்றும் வடநாட்டவர்கள் தமிழகத்தில் ஆதிக்க சக்திகளாக மாற விட மாட்டோம் என்று அடுக்கடுக்காக விளம்பரப் பிரச்சாரம் செய்து வருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். ‘தெற்கு தேய்கிறது, வடக்கு வளர்கிறது’ என்று கோபப்பட்ட அண்ணாவே இன்று அண்ணாதி.மு.க. செய்த புரட்சியால் வடக்கு தேய்ந்து, தமிழகம் வளர்ந்து விட்டதை பார்த்து பூரித்து […]

நாடும் நடப்பும்

அண்ணா தி.மு.க. அரசு தொடர வேண்டும், ஏன்?

* வேலை வாய்ப்புகள் * கிராம வளர்ச்சி * மகளிர் மேன்மை * கல்வி மேன்மை * அறிவுசார் புரட்சி தமிழக பொருளாதார வளர்ச்சியில் மனித வளம்: எடப்பாடி, பன்னீர்செல்வம் தரும் உறுதி இயற்கை சீற்ற சேதத்தை சரி செய்வதில் அண்ணா தி.மு.க. சாதனை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்கள் என்ற பட்டியலில் முன் நிற்பது மனித வளம். அதாவது ஒரு ஊரின் ஜனத்தொகை ஆரோக்கியமாக இருக்கிறதா? கல்வி அறிவுத்திறன் மேன்மையாக […]

செய்திகள்

மன்னிப்பு கோரினார் ராசா

ஊட்டி, மார்ச் 29– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த தரக்குறைவான பேச்சுக்கு மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன் என்று ஆ.ராசா கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில், அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. இது தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் அண்ணா தி.மு.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. […]