சென்னை, ஜூன் 1– ராஜ்யசபை தேர்தலுக்கு அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அண்ணா தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடரும். 2026–ம் ஆண்டு தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபை சீட் வழங்கப்படும் என்றும் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ”அண்ணா தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.6.2025 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், […]