செய்திகள்

திருத்தணி அருகே வாகன சோதனை: ரூ. 3.29 லட்சம் பறிமுதல்

திருத்தணி, மார்ச் 11– திருத்தணி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ. 3.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அரக்கோணம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரக்கோணம் நோக்கி சென்ற வேனை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் ரூ. 3.29 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போது, திருமண நிகழ்ச்சிக்காக பட்டுச் […]

செய்திகள்

சென்னை பாரிமுனையில் 16 கிலோ வெள்ளி, 4 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை, மார்ச். 10– சென்னை பாரிமுனையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 16 கிலோ வெள்ளி, ரூ. 4 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, பாரிமுனை, பூக்கடை ஈவினிங் பஜார் அருகே நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக […]

Uncategorized

முட்டை, காய்கறி வியாபாரிகளிடம் ரூ.3.82 லட்சம் பணம்: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

திருச்சி, மார்ச் 9– திருவெறும்பூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் காரில் வந்த முட்டை மற்றும் காய்கறி வியாபாரிகளிடமிருந்த லட்சத்து 82 ஆயிரம் 500 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருள்களை பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள […]

செய்திகள்

கரூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

கரூர், மார்ச் 4– கரூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தலா 6, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை தொகுதிகளுக்கு தலா 3 குழுக்கள், 4 தொகுதிகளிலும் வீடியோ கண்காணிப்புக்குழு, கணக்கீட்டுக்குழு தலா 1 என மொத்தம் 44 குழுக்கள் […]

செய்திகள்

கமல்ஹாசன் படத்துடன் 3 மூட்டை பனியன் பறிமுதல்

கடலூர், மார்ச்.1- கடலூர் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் கமல்ஹாசன் படத்துடன் 3 மூட்டைகளில் இருந்த பனியன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேதியை அறிவித்த உடனே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவை அமைத்து, மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட தேர்தல் […]