செய்திகள்

கொரோனா அச்சத்தால் இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் முடிவு

புதுடெல்லி, மே.6– பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒத்தி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:– ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 151ஏன் படி, ஒரு தொகுதி காலியான 6 மாதங்களுக்குள், அந்த பதவிக்கான ஆயுள் ஒரு வருடமோ அதற்கு மேற்பட்டோ இருந்தால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தாத்ரா & நாகர் ஹவேலி, கந்த்வா […]

செய்திகள்

கொரோனா இறப்புகள் அதிகரித்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு: மம்தா

கொல்கத்தா, ஏப். 18– மேற்கு வங்கத்தில் கொரோனாவால் இறப்புகள் அதிகரித்தால் அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று மம்தா குற்றம்சாட்டியுள்ளார். 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 3 கட்டங்கள் வரும் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் ஹல்சி பகுதியில் பேசிய மம்தா, ”வெளிமாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது மேற்கு […]

செய்திகள்

ஒரே கட்டமாக தேர்தல் நடத்த மம்தா கோரிக்கை: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

கொல்கத்தா, ஏப். 16– மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 159 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற மம்தாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 5-ம் கட்டமாக ஏப்ரல் […]

செய்திகள்

தமிழக தேர்தல்: சென்னையிலிருந்து 4.23 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை, ஏப். 5– தேர்தலை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மூலம், சென்னையிலிருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழக தொழிலாளர் நல ஆணையம், நாளை அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, வெளியூர்களில் தங்கிப் பணிபுரிபவர்கள் […]

செய்திகள்

‘கூகுள் பே’ செயலிக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு

மதுரை, ஏப். 1– கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற செயலிகளில் பண பரிமாற்றத்தை தடை செய்யும்படி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு […]