புதுடெல்லி, அக். 6– பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ள நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை, தேசிய திரைப்பட விருதுகள் திரும்பப் பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஜானி மாஸ்டர் என அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா. இவர், 2022 ஆம் ஆண்டில் வெளியான நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் ‘மேகம் […]