விழுப்புரம், ஜூலை9- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அனல்பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தல் போட்டியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆளும் கட்சியான தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் […]