செய்திகள்

தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ரத்து

ஊட்டி, ஜூலை 22– தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் உதகை – குன்னூர் இடையே மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிர்பார்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது. இருப்பினும், தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டின் மலை மாவட்டங்களில் இன்று கன, அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 17– தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், சென்னையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் கனமழை முதல் அதிகனமழை வரையில் பெய்து வருகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

நீர்வரத்து வினாடிக்கு 20,910 கனஅடி மேட்டூர், ஜூலை 17– காவிரியில் நீர் பிடி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஒரே நாளில் மேட்டூர் அணையில் 2.97 கனஅடியாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கர்நாடகா காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரளா வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு […]

Loading

செய்திகள்

தென்மேற்கு பருவமழை: பேரிடர் மீட்புப் படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல் சென்னை, ஜூன் 21– தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேரிடர் காலங்களில், பிரத்யேகமாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு துறைகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசுத் துறை […]

Loading

செய்திகள்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 2 ந்தேதி முதல் வெப்பம் குறையும்

சென்னை, மே 30– சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஜூன் 2 ந்தேதி முதல் வெப்பம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் முதல் தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முன்பாகவே பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்பம் குறையும் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி […]

Loading