தூத்துக்குடி, அக். 18– தூத்துக்குடி அருகே பெரியசாமிபுரம் கடலில் இன்று காலையில் குளித்துக் கொண்டிருந்த 5 பெண்களில், 2 பெண்கள் கடல் அலையில் சிக்கி பலியான நிலையில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மதுரை ஜி. ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் சாமி கும்பிடுவதற்காக கடந்த 15 ந் தேதி சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலையில் வேம்பார் பெரியசாமிபுரம் கடலில் அவர்கள் […]