சென்னை, செப். 16– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பெரியாரின் பிறந்த நாளான 17–ந்தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தார். அன்றைய நாள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது இந்த நிலையில் நாளை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழி இன்று ஏற்கப்பட்டது. சென்னை தலைமைச் […]