சென்னை, டிச. 9– 2 கொலை வழக்குகள் தொடர்பாக தேடிச்சென்ற போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர், சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஹரி என்கிற அறிவழகன் வயது 28. சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது தி.மு.க. பிரமுகர் இடி முரசு இளங்கோ, அவரது உறவினர் பழனி, திவாகர் ஆகியோரை கொலை செய்த வழக்குகள் உட்பட திருத்தணி, சோழவரம், ஓட்டேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன. இளங்கோ […]