புளோரிடா, செப். 16– அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டிரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தமுறை காயம் ஏதுமின்றி டிரம்ப் தப்பியிருந்தாலும் 3 மாதங்களில் இரண்டாவது முறையாக டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் புளோரிடாவில் உள்ள கோல்ப் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விளையாடிக் கொண்டிருந்த பகுதியைக் குறிவைத்து 4 ரவுண்ட் துப்பாக்குச் […]