செய்திகள்

தமிழக தேர்தல் பணி: துணை ராணுவத்தினர் தமிழகம் வருகை

சென்னை, மார்ச்.1- தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பணிக்காகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவு […]