நாடும் நடப்பும்

எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னணி: ஜெயலலிதா ஏற்படுத்திய புரட்சி பாரீர்!

*ஜெயலலிதாவின் பிறந்த நாளை இன்று நாடே கொண்டாடுகிறது எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னணி: ஜெயலலிதா ஏற்படுத்திய புரட்சி பாரீர்! எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையில் தொடரும் சாதனைகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இன்று நாடே கொண்டாடுகிறது. தமிழகமெங்கும் பலர் இல்லங்களில் வாசலில் அவரது புகைப்படத்திற்கு மாலை மரியாதை செய்து ஆராதித்தனர். அதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா தமிழகத்திற்காக அவர் செய்த சேவைகளை். குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சியையே அவரது சுவாசமாய் இறுதி வரை வைத்ருந்தார். அவரது இதயத் துடிப்பெல்லாம் […]

செய்திகள்

மின்சார மான்ய கட்டணங்களுக்காக ரூ.8,834 கோடி ஒதுக்கீடு

சென்னை, பிப்.23 மின்சார மான்ய கட்டணங்களுக்காக ரூ.8,834 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், அவர் கூறியதாவது: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிறுவுதிறனான 16,167 மெகாவாட் உட்பட, மாநிலத்தின் தற்போதைய ஒட்டு மொத்த மின் நிறுவுதிறன் 32,149 மெகாவாட் ஆகும். 2011 ம் ஆண்டு முதல் மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்கள், மின்கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் ஆகியவற்றின் வாயிலாக, […]

செய்திகள்

பள்ளிக்கல்விக்கு ரூ.34,181 கோடி

குழந்தைகளுக்கு உயர்தரக் கல்வி வழங்குவதே அரசின் உயர்ந்த முன்னுரிமை பள்ளிக்கல்விக்கு ரூ.34,181 கோடி சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு சென்னை, பிப்.23 பள்ளிக்கல்விக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அவர் மேலும் பேசியதாவது: குழந்தைகளுக்கு உயர்தரக் கல்வியை வழங்குவது இந்த அரசின் உயர்ந்த முன்னுரிமையாகும். எனவே, பள்ளிக் கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21ஆம் ஆண்டிற்கான வரவு? செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 34,181.73 கோடி ரூபாய் […]

செய்திகள்

ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.27 ஆயிரத்து 278 கோடி

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5141.60 கோடி * ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754 கோடி ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.27 ஆயிரத்து 278 கோடி சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு 40 லட்சம் வீடுகளுக்கு ரூ.3016 கோடியில் குடிநீர் இணைப்பு சென்னை, பிப்.23– ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.27 ஆயிரத்து 278 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2021–22 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு செலவுத் திட்ட […]

செய்திகள்

சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் மகன் திருமணம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வாழ்த்து

காஞ்சீபுரம், பிப். 22- தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் மகன் இரா.அஷ்வின் பி.ஷண்முகப்பிரியா ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் வெகு சிறப்பாக நடை பெற்றது. இந்த திருமணத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவரை சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், அவரது துணைவியார் ருக்மணி ராசேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். […]

செய்திகள்

தேனி-அல்லிநகரம் மந்தையம்மன் குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணி

தேனி, பிப். 19– தேனி-அல்லிநகரம் மந்தையம்மன் குளத்தில் அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணியினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட மந்தையம்மன் குளம் உள்ளது. இக்குளம் முழுவதும் ஆகாயத் தாமரைகள் நிறைந்து தண்ணீர் மாசடைந்த நிலையில், இக்குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றி, தூர்வார அப்பகுதி விவசாயிகள், குடியிருப்போர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று […]

நாடும் நடப்பும்

தமிழகத்தில் அமேசான்

உலகப்புகழ் ‘டெலிவரி’ நிறுவனமான அமேசான் புதுப்புது எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்கும் நிறுவனம் என்பது அதன் சிறப்பாகும். அமேசானில் ஒரு பொருளை வாங்கும்போது விலை, தரம் முதலியவற்றை பார்த்து வாங்க முடிகிறது. அதே வரிசையில் தங்களது தயாரிப்புகளையும் விற்பதால் அவர்களும் கடும் போட்டியை சந்தித்தாக வேண்டும். அதை சமாளிக்கும் விதத்தில் நல்ல தரமான கணினி யுக சாதனங்களை வடிவமைத்து விற்பனையிலும் சாதித்து வருகிறார்கள். அந்த வரிசையில் அவர்களது தயாரிப்புகளில் விற்பனைப் பட்டியலில் முன்னணியில் இருப்பது டிவியில் ஸ்ட்ரீமிங் வசதியை […]

செய்திகள்

யாரும் யாருக்கும் அடிமை இல்லை : ஓபிஎஸ் டுவீட்

சென்னை, பிப். 9– கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தான் கொண்டாடி வருகிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் டுவிட்டர் பக்கத்தில், “கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் “கொத்தடிமை முறை ஒழிப்பு நாள் (Feb-9), இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன். “யாரும் யாருக்கும் அடிமை இல்லை” என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து […]

நாடும் நடப்பும்

தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு புரட்சி திட்டங்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பிக்க தயாராகி விட்டது. பட்ஜெட்டில் சலுகைகள் ஏதும் இருக்காது. ஆனால் கடந்த ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யும் பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கவர்னர் உரையுடன் இம்மாத துவக்கத்தில் துவங்கிய சட்டமன்ற பட்ஜெட் அறிவிப்பு கூட்டத்தொடர் துவங்கும் முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி 34 முக்கிய முதலீடுகளுக்கு ஒப்புதல் […]

செய்திகள்

பயிர்கடன் ரூ.12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்புக்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்பு

வடவள்ளி, பிப். 6– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் உள்ள 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற விவசாய கடன் தொகை ரூ.12 ஆயிரத்து 110 கோடியை தள்ளுபடி செய்து சட்டப்பேரவையில் அறிக்கை வெளியிட்டார். இதை அடுத்து கோவை மாநகர் மாவட்ட வடவள்ளி பகுதி சார்பில் வடவள்ளி பேருந்து முனையத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் தலைமையில் அண்ணா திமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் […]