செய்திகள்

கோவை கருமத்தம்பட்டி நூற்பாலையில் திடீர் தீ விபத்து

கோவை, ஏப். 12– கருமத்தம்பட்டியில் தனியார் வார்ப்பு நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் வையாபுரியப்பன். இவர் அப்பகுதியில் சாந்தி சைசிங் மில் என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வார்ப்பு நூற்பாலை நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றபோது, […]

செய்திகள்

திருப்பதி திருமலையிலுள்ள குப்பைக் கிடங்கில் திடீர் தீ

திருப்பதி, மார்ச் 25– திருப்பதி திருமலையில் உள்ள குப்பை கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை, தீயணப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். திருப்பதி திருமலையில் பாபவிநாசம் செல்லும் சாலையில், காக்குல கொண்ட அருகே தேவஸ்தான குப்பை கிடங்கு உள்ளது. திருமலையில் சேகரிக்கக் கூடிய குப்பைகள் அனைத்தும் இங்கு கொட்டப்பட்டு திடக் கழிவுகளாக பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததால் மளமளவென […]

செய்திகள்

ராசிபுரம் கிடங்கில் தீ விபத்து: ரூ.7 கோடி மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசம்

ராசிபுரம், பிப்.4– நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ. 7 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் இன்று அதிகாலை எரிந்து நாசமாயின. ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் என்பவருக்கு சொந்தமான மூட்டைகள் இருப்பு வைக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் […]