செய்திகள்

கனிமொழிக்கு கொரோனா தொற்று

சென்னை, ஏப்.3– திமுக மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சமூகத்தில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று உறுதி தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, திமுக மகளிர் அணிச் செயலாளரான தூத்துக்குடி எம்பி கனிமொழி, தீவிர […]

செய்திகள்

ராதாரவிக்கு ஒரு நியாயம்; ராசாவுக்கு ஒரு நியாயமா? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை, மார்ச் 31– பெண்களை இழிவாக பேசியதற்காக ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய தி.மு.க., ஆ.ராசாவை நீக்கவில்லையே எனக்கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ராதாரவிக்கு ஒரு நியாயம், ராசாவுக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் எழிலனை ஆதரித்து சமீபத்தில் மக்களவை தி.மு.க. உறுப்பினர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, முதல்வர் குறித்து கூறிய கருத்துக்காக மனம் திறந்து […]

செய்திகள்

‘ஸ்டாலின்தான் வாராரு’ விளம்பர செலவை தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க கோரி மனு

சென்னை, மார்ச் 30– தி.மு.க.வினர் வைத்துள்ள ‘ஸ்டாலின்தான் வாராரு’ விளம்பர பலகைகளின் செலவுத் தொகையை, ஸ்டாலின் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும் என கொளத்தூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் விஜயகுமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– கொளத்தூர் தொகுதியில், ‘ஸ்டாலின்தான் வாராரு; விடியல் தர போறாரு’ என்ற வாசகங்கள்; தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஸ்டாலின் புகைப்படம்; தி.மு.க. சின்னத்துடன், மின் விளக்கு பொருத்தப்பட்ட 2,000 டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் ஆகியவை […]

செய்திகள்

கமலைத் தாக்கிய கவுதமி

சென்னை, மார்ச் 29– ஒவ்வொருவரும் புதிய கட்சி தொடங்கும் போது மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறுவது வழக்கம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை கடைபிடிக்கிறது என்று நடிகை கவுதமி பேசினார். நடிகை கவுதமி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாரதீய ஜனதா கட்சி தலைவர்களான வாஜ்பாய், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கடந்த 23 ஆண்டுகளாக இக்கட்சி மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதன் காரணமாகவே பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தேன். […]

செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை: கவர்ச்சி திட்டங்களை அறிவித்தார் ஸ்டாலின்

சென்னை, மார்ச் 13– தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையை இன்று மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன என்று ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து அவர் தேர்தல் அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:– திருக்குறளை தேசிய நூலாக […]

செய்திகள்

ஸ்டாலின் – கொளத்தூர் உதயநிதி – சேப்பாக்கம்

173 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு ஸ்டாலின் – கொளத்தூர் உதயநிதி – சேப்பாக்கம் 129 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. – தி.மு.க. நேரடி போட்டி சென்னை, மார்ச் 12 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். இதில் கொளத்தூரில் 3வது முறையாக ஸ்டாலினும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அவரது மகன் உதயநிதியும் போட்டியிடுகின்றனர். இன்று வெளியான பட்டியலில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெயர்கள் இடம் […]

செய்திகள்

தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இழுபறி நீடிப்பு

சென்னை, மார்ச் 6– தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் தரப்படும் என்ற நிலையில் தி.மு.க. கொடுக்க முன்வந்துள்ள தொகுதிகளை ஏற்பதா? வேண்டமா? என ம.தி.மு.க. உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட உள்ளது. தற்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. கட்சிகளுடன் தி.மு.க. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ம.தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஏற்கமுடியவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் […]

செய்திகள்

தொகுதிப் பங்கீடு: தி.மு.க. மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி

சென்னை, மார்ச் 2– சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. மீது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றன. தி.மு.க.வை பொறுத்தவரை அந்த கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. ஐபேக் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையைக் […]