செய்திகள்

மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத தி.மு.க. அரசு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன. 19: 25வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. யார் நலனிலும் அக்கறையில்லாத தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டிருக்கும் போராட்டம் இன்றும் 25ம் நாளாக நீடிக்கிறது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து எந்தக் கவலையும் […]

Loading

செய்திகள்

கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்வதா: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, ஜன. 19: கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த […]

Loading

செய்திகள்

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

சென்னை, ஜன. 11: தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு முழுவதும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் பணிபுரிவதாகவும்; அலுவலகப் பணி, களப் பணி, தேர்தல் பணி என அனைத்துப் பணிகளையும் இரவு பகல் பாராமல் மேற்கொண்டு வருவதாகவும்; வருவாய்த் துறையில் பணிபுரியும் […]

Loading

செய்திகள்

மறைமலை நகர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து: அண்ணா தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

தாம்பரம், ஜன. 10: மறைமலைநகர் நகராட்சி அவலங்களை கண்டுகொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் நகர கழக செயலாளர் எம்.ஜி.கே. கோபிகண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் பா.பென்ஜமின் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் […]

Loading

செய்திகள்

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தி.மு.க. அரசு படுதோல்வி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை, டிச. 29: தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- சென்னையில் இருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழித்து வரும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு […]

Loading

செய்திகள்

ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள் : அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, டிச. 15: நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 2021–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க.வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எண் 236-ல் “தமிழ்நாட்டின் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின்கீழ் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தேர்தல் […]

Loading

செய்திகள்

மணல் திருட்டை தடுக்காத தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்

சென்னை, நவ. 25: மணல் திருட்டை தடுத்து நிறுத்தாத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என பல சட்ட விரோதச் செயல்கள் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கின்றன. இதன் விளைவாக, வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறிக் கொண்டு வருகிறது. 2021–ம் ஆண்டு தி.மு.க. […]

Loading

செய்திகள்

‘‘மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்’’ !

தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் சென்னை, மே 19– ‘‘மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்து இருக்கும் முடிவினை கைவிட வேண்டும்’’ என தி.மு.க. அரசை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்துவதை தி.மு.க. அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ‘‘சொன்னதைச் செய்வோம்” என்று அறிவித்துவிட்டு சொன்னதற்கு முரணாக […]

Loading

செய்திகள்

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் பலி :

தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் ; ரூ. 10 லட்சம் நிவாரண உதவிக்கு அறிவுறுத்தல் சென்னை, ஏப் 21– திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசு என்று குற்றஞ்சாட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

Loading