செய்திகள்

முகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்!

திருவில்லிபுத்தூர், ஏப்.13– திருவில்லிபுத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கலெக்டர் ரா.கண்ணன் உத்தரவின்பேரில் கொரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அனைவரும் தடுப்பு ஊசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடுப்பது […]

செய்திகள்

திருவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவால் உயிரிழப்பு

திருவில்லிபுத்தூர், ஏப்.11– திருவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதிக்கு வத்திராயிருப்பைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அவருக்கு வயது 63. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரண்டு நாட்கள் […]

செய்திகள்

திருவில்லிபுத்தூர் அருகே 5 தலைமுறைகளைப் பார்த்த மூதாட்டியின் 101வது பிறந்தநாள் விழா

திருவில்லிபுத்தூர், மார்ச்.5– திருவில்லிபுத்தூர் அருகே 5 தலைமுறைகளைப் பார்த்த மூதாட்டியின் 101வது பிறந்தநாள் விழாவை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். மாறிப்போன இயற்கைச் சூழல், மாறுபட்ட உணவு பழக்க வழக்க முறைகள் உட்பட பல்வேறு காரணங்களால் மனித இனம் இன்று 80 வயதைக் கூட எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்த மகாதேவன் மனைவி பழனியம்மாள் செஞ்சுரி அடித்து 101வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அத்துடன் […]