செய்திகள்

தண்ணீர் நிறைந்த அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர், மே 28– தண்ணீர் நிறைந்த அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் என்.என்.ஆர். கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் நித்யா (2 வயது). நேற்று காலை என்.என்.ஆர். கண்டிகை இருளர் காலனியில் தனது தாயுடன் குழந்தை நித்யா இருந்தார். மாம்பழம் சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக குழந்தை நித்யா தண்ணீர் நிறைந்த ஸ்டீல் அண்டாவில் எட்டி பார்த்தார். அப்போது […]

Loading

செய்திகள்

கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து தந்தை – மகள் தற்கொலை

திருவள்ளூர், மே 25– திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் தந்தை-மகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த ஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவரது மனைவி வாணி. இவர்களது 6 வயது மகள் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார். லோகநாதன் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். மேலும் அவர், ஆன்லைன் டிரேடிங் […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் வீரராகவ கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர், மே 6– திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் மூழ்கி குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்சவம் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில் உள்ள பாடசாலையில் இருந்து பாராயணம் படிப்பதற்காக 5 பேர் வந்துள்ளனர். இதையடுத்து வீரராகவ கோயில் குளத்தில் இன்று காலை 6 மணியளவில் சந்தியாவதனம் […]

Loading

செய்திகள்

ரயிலை கவிழ்க்க சதியா..?: திருவள்ளூர் அருகே தண்டவாளத்தின் போல்ட்நட்டுகள் அகற்றம்

திருவள்ளூர், ஏப். 25– திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரெயிலை கவிழ்க்க சதியா? என ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை–அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் பகுதியில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரெயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் இன்று காலை திடீரென சிக்னல் கட்டாகி இருந்தது ரெயில்வே ஊழியர்களுக்கு […]

Loading

செய்திகள்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

சென்னை, டிச. 24– வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:– தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் 344 ஏரிகள் நிரம்பின

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு சென்னை, டிச.2– சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கனமழை கொட்டியது. இதன் காரணமாக சென்னைக்கு […]

Loading