திருவனந்தபுரம், ஜூன்.10- உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி., இரினா, கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தடைந்தது. அந்த கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் சர்வதேச விழிஞ்ஞம் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் கடந்த மே மாதம் 2-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. துறைமுக வளாகத்தில் நடந்த பிரமாண்டமான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த துறைமுக பணி ஆரம்பிக்கப்பட்டபோது கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை சமாளித்த […]