சென்னை, செப். 11 மனைவியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி கூறிய அவருடைய மனைவி ஆர்த்தி ரவி, இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி அறிக்கையில், “அண்மையில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். […]