விருதுநகர், அக். 15– விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார், திடீரென நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் உயிர்தப்பினர். திருப்பூர் அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47). இவர் தனது உறவினர் மகன் மனோஜ் என்பவரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்த்துவிட்டு உறவினருடன் திருப்பூருக்கு நேற்று மாலை தனது காரில் புறப்பட்டார். தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே […]