செய்திகள்

ரெயில் மோதி ரயில்வே ஊழியர்கள் பலி

திருப்பத்தூர், மே 31– ஆம்பூர் அருகே இன்று அதிகாலையில் சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே தொழிலாளர்கள் மீது, சரக்கு ரெயில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள கன்னிகாபுரம் பகுதியில், இன்று அதிகாலை ரயில்வே சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, புதூர்நாடு பகுதியை சேர்ந்த சீனியர் டெக்னீசியன் முருகேசன், பீகாரை சேர்ந்த டெனீசியன் பிரவேஷ் குமார் உள்ளிட்டோர் அந்த பகுதியில் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 2 ரெயில்வே […]

செய்திகள்

16 மாவட்டங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப். 4– 16 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டும் என்றும், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வருகிறது. வேலூர், திருத்தணி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் […]

செய்திகள்

தி.மு.க.விடம் அடி வாங்கவா ஓட்டுப்போடப் போகிறீர்கள்? மக்களே, சிந்தியுங்கள்

* கடையில் செல்போன் வாங்கி விட்டு பணம் தரமாட்டார்கள் * பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் அடிப்பார்கள் தி.மு.க. என்றாலே அராஜகம் – ஊழல் தி.மு.க.விடம் அடி வாங்கவா ஓட்டுப்போடப் போகிறீர்கள்? மக்களே, சிந்தியுங்கள் திருப்பத்தூரில் எடப்பாடி பிரச்சாரம் திருப்பத்தூர், மார்ச் 26 தி.மு.க.விடம் அடி வாங்கவா அவர்களுக்கு ஓட்டு போட போகிறீர்கள், சிந்தித்து பாருங்கள் என்று வாக்காளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். தி.மு.க. என்றாலே அராஜகம், ஊழல் தான் என்றும் முதலமைச்சர் கூறினார். […]

செய்திகள்

திருப்பத்தூர் வாகன சோதனையில் ரூ.22 கோடி தங்க நகைகள் பறிமுதல்

திருப்பத்தூர், மார்ச் 12– திருப்பத்தூர் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இருந்த போதிலும் வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா என கேட்டு, 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் நகைகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று […]

செய்திகள்

தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் அறிவுரை

வாகனங்களை சோதனை செய்யும் பொழுது பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் அறிவுரை திருப்பத்தூர், மார்ச் 4– தேர்தல் நன்னடத்தை விதிமுறையின்படி வாகனங்களை சோதனை செய்யும்பொழுது பொது மக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு திருப்பத்தூர் கலெக்டர் ம.ப.சிவன்அருள் அறிவுறுத்தினார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக்குழுக்களுக்கு பணி ஆய்வுக்கூட்டம் மற்றும் தேர்தல் நன்னடத்தை […]