திருமலை, ஏப். 14– சிங்கப்பூர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் இருந்து மகன் உயிர் தப்பிய நிலையில், திருப்பதியில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவு செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஸ்னேவா. இவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர். 2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஐதராபாத்தில் தான் […]