திருப்பதி, ஆக. 2– திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான ஊழியர் ஒருவர், காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலர்களை திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின், உண்டியலில் காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். அந்த தொகையில் வெளிநாட்டு பக்தர்கள் செலுத்திய பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் இருக்கும். இந்நிலையில், திருமலை ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிக்குமார் தேவஸ்தான ஊழியராக […]