செய்திகள்

வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய மாணவன்

தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் காயம் நெல்லை, ஏப். 15– நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தனியார் பள்ளி வழக்கம் போல் இன்று காலை செயல்பட தொடங்கியது. பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் தமது அன்றாட பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, 8ம் வகுப்பு மாணவன் ஒருவனை, சக மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. இந்த தாக்குதலை தடுக்க […]

Loading

செய்திகள்

சட்ட விரோதமாக தாது மணல் எடுத்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, பிப். 17– சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்கள், அதிக விலை மதிப்புடைய தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த சில நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக எடுத்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து உள்ளன. கடந்த 2012 முதல் […]

Loading

செய்திகள்

ரூ.3,800 கோடியில் டாடா பவர் ‘சோலார் பேனல்’ தொழிற்சாலை

திருநெல்வேலி, பிப்.7- திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் ‘சோலார் பேனல்’ தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு டாடா பவர் சோலார் நிறுவனம் சார்பில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்வதற்கான தகடுகள் (சோலார் பேனல்) மற்றும் உபகரணங்கள் (மாடுல்) ஆகியவற்றை தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.3,800 கோடி முதலீட்டில் 380 ஏக்கரில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 4 […]

Loading

செய்திகள்

அரசு மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை 15 கி.மீட்டர் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற மகன்

திருநெல்வேலி, ஜன. 25– திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் 15 கி.மீ. தூரம் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலை. இவரது மனைவி சிவகாமியம்மாள் (60). இவர்களது மகன் பாலன் (38). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சிவகாமியம்மாளுக்கு கடந்த 11–ந் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Loading

செய்திகள்

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிர் பிரிந்தது

திருநெல்வேலி, ஜன. 12– நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (56) உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்த பெற்ற, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சுவாமி அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இக்கோயில் விழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் சுவாமிக்கு முன் காந்திமதி செல்லும். இந்த கோவிலில் உள்ள யானை காந்திமதி (56), நன்கொடையாளர்களால் 1985ல் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக காந்திமதி […]

Loading

Uncategorized

திருநெல்வேலியில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி, டிச. 20– திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை கீழ நத்தத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் மாயாண்டி […]

Loading

செய்திகள்

54 செ.மீ. மழை: வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குடியிருப்புகளில் நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி நெல்லை, டிச. 13– திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அம்பை – 36 செ.மீ.,காக்காச்சி – 35 செ.மீ., மாஞ்சோலை – 32 செ.மீ., […]

Loading

செய்திகள்

மழை பாதிப்பை சமாளிப்போம்: ஸ்டாலின் உறுதி

சென்னை, டிச.13– மழை வெள்ள பாதிப்பை சமாளித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். கேள்வி: தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? முதலமைச்சர் பதில்: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே […]

Loading

செய்திகள்

தமிழகத்துக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள்

சென்னை, அக். 22– தமிழகத்தில் இரண்டு ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கு இணையாக, ஏ.சி., இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. நடப்பாண்டு இறுதிக்குள் நாடு முழுதும், 26 ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன. திருநெல்வேலி -– ஷாலிமர், தாம்பரம் -– சந்திரகாசி என இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்க உள்ளன. […]

Loading