செய்திகள்

சிறுமிக்கு பாலியல் சீண்டல்: தாளாளர் கணவர் உள்ளிட்ட 4 பேர் கைது

திருச்சி, பிப். 7– திருச்சி மணப்பாறை அருகில் 4 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், பள்ளி தாளாளர் கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி முதல்வர் போலீசில் சரணடைந்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறைப்பட்டி சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்த். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது, 4 ஆம் வகுப்பு படித்து வரும் […]

Loading

செய்திகள்

திருச்சி சூரியூரில் ரூ.3 கோடியில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்

திருச்சி, ஜன. 23– திருச்சி சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் சூரியூரில், ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தொடக்க ஜல்லிக்கட்டு போட்டி என்பதால், இது மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் பங்கேற்கும். இந்த ஆண்டு சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் […]

Loading

செய்திகள்

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் திருச்சி, டிச. 25– திருச்சியில் இருந்து கோலாலம்பூர் புறப்பட இருந்த விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதே சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 12.10 […]

Loading

செய்திகள்

நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்: திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சு

சண்டிகர், டிச. 5– நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று சண்டிகரில் நடைபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசினார். சண்டிகர் மாநிலத்தில் 5-வது தேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ். இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது இணையதள குற்றங்களை […]

Loading

செய்திகள்

இருவேல்பட்டு கிராம மக்கள் சாலை மறியல்: திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்

2 நாட்களாக மீட்பு பணிக்கு வராததால் ஆத்திரம் பேச்சுவார்த்தைக்கு வந்த அமைச்சர் பொன்முடி, அதிகாரிகள் மீது சேற்றை வீசி விரட்டியடிப்பு விழுப்புரம், டிச. 3– பெஞ்ஜல் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து 2 நாட்கள் ஆகியும் மீட்பு பணிகளுக்கு அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்ற […]

Loading

செய்திகள்

சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விமான பயணிகள் மத்தியில் அச்சம் சென்னை, அக். 21– நாடு முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயுதப் பூஜை, துர்கா பூஜை, தீபாவளி எனப் பல்வேறு பண்டிகையின் காரணமாக கடந்த 10 நாள்களாக உள்நாடு மற்றும் […]

Loading

செய்திகள்

நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; திறனுடன் தரையிறக்கி 141 பயணிகளின் உயிரை காத்த விமானி

திருச்சி, அக். 12– திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமான தரையிறக்கி 141 ப தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், விமானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மக்கள் விமானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் […]

Loading

செய்திகள்

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்

மதுரை, அக். 8– திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல் – -திருச்சி ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பூங்குடி- – திருச்சி ரெயில் பாதையில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் […]

Loading

செய்திகள்

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்

புதுடெல்லி, செப்.13-– தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியது. காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 103-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில நிர்வாகிகளும் அவர்களது தலைமையிடத்தில் இருந்து கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் அரசு உறுப்பினரும், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளருமான ஆர்.தயாளகுமார் திருச்சியில் இருந்தும், பிற அதிகாரிகள் சென்னையில் இருந்தும் பங்கேற்றனர். […]

Loading