சென்னை, மார்ச்.25- இஸ்லாமியர்களுக்கு காவல் அரணாக தி.மு.க. எப்போதும் இருக்கும். பாரதீய ஜனதாவின் சதித்திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க. சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத் தலைவரும், தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான துறைமுகம் […]