செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 3-ந்தேதி தமிழகம் வருகை

திருச்சி, ஆக. 25– ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 3–ந்தேதி தமிழகம் வருகிறார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு […]

Loading

செய்திகள்

தொழில் அதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட 68 பேருக்கு பத்ம விருதுகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார் புதுடெல்லி, மே 28– ஜவுளி தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார். கலை, சமூகப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, ‘பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ’ ஆகிய நாட்டின் உயரிய விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. நடப்பு, 2025க்கான விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

புதுடெல்லி, மே 14– ‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் சந்தித்து பேசினர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் அங்குள்ள 9 பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. எல்லைக்கோட்டை தாண்டாமல் […]

Loading

செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் போர்ப்பதற்றம் எதிரொலி: ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகை ரத்து

திருவனந்தபுரம், மே.10- வைகாசி மாத பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 19-ந் தேதி சபரிமலைக்கு வர இருப்பதாக கேரள உள்துறைக்கு கடந்த 6-ந் தேதி தகவல் வந்தது. அவர் பம்பையில் இருந்து இருமுடி கட்டி பாதயாத்திரையாக சன்னிதானம் செல்வதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு உள்பட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வந்தது. ஜனாதிபதியின் வருகையையொட்டி சபரிமலையில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு […]

Loading

சினிமா செய்திகள்

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது:

ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார் புதுடெல்லி, ஏப்.29- நடிகர் அஜித்குமார் உட்பட, 71 பேருக்கு பத்ம விருதுகளை, டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். கலை, அறிவியல், இலக்கியம், வர்த்தகம், மருத்துவம், சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்த நிலையிலான இந்த உயரிய விருதுகள் இந்த ஆண்டுக்காக […]

Loading