தெருத் தெருவாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை முன்னால் காலை, மாலை இரவு என்று அறுசுவை உணவு விருந்து படைக்கப்பட்டது. அன்று மதியம் சுரேஷ் தன் நண்பர்களுடன் சென்று வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்துடன் மதிய உணவு சாப்பிட்டான் . சுடச்சுடப் பரிமாறப்பட்ட உணவையும் விநாயகரையும் ஒரு சேரப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர் சுரேஷும் நண்பர்களும். “மாப்ள இந்த விநாயகர் நமக்கு அறுசுவை விருந்து குடுத்திருக்கிறார். இன்னும் எத்தன நாளைக்கு இப்பிடி கெடைக்கும் “ “இன்னும் ரெண்டு மூணு […]