செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை’’: விஜய் கண்டனம்

‘‘நாடாளுமன்ற செயல்பாடுகளில் திருத்தம் கொண்டு வராமல் உறுப்பினர்களை அதிகரிப்பதால் பலனில்லை’’ சென்னை, மார்ச் 5– ‘‘தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை’’ என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக விஜய் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– “நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு […]

Loading

செய்திகள்

மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: தவெக, பாஜக உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு

சென்னை, பிப். 26-  தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து அடுத்த மாதம் மார்ச் 5-ந் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இந்த நிலையில், மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Loading

செய்திகள்

தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை உத்தரவு

சென்னை, பிப்.14– தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு 2வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கிடையே 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில், தேர்தல் வியூக […]

Loading

செய்திகள்

2–ம் ஆண்டில் தவெக: மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்: நடிகர் விஜய் சூளுரை

தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தமிழக வெற்றிக் கழகம் மாறும், மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:– இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் 2ம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி […]

Loading

செய்திகள்

வேலு நாச்சியார் நினைவு நாள்: தவெக அலுவலகத்தில் விஜய் மரியாதை

சென்னை, டிச.25– தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த ராணி வேலுநாச்சியாரின் 228–வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் […]

Loading

செய்திகள்

பாலியல் புகார்களுக்கு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும்

தவெக தலைவர் விஜய் கோரிக்கை சென்னை, நவ. 25– தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், அதனை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய […]

Loading