தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு மதுரை, பிப். 3– கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, ஏலம் விட நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. பசுமை தீர்ப்பாயம் உத்தரவு படி, கேரளா அதிகாரிகள் […]