செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு வரலாறு சமூக நீதி எதுவும் தெரியாது: அன்புமணி கடும் விமர்சனம்

தருமபுரி, மார்ச் 26– தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அண்ணா திமுக பாமக கூட்டணி, சமூக நீதிக்கான கூட்டணி என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம் பெரியம்பட்டி, புலிகரை உள்ளிட்ட பகுதிகளில் அண்ணா திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனோ தொற்று அதிகரிப்பதால், பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வியாபாரி–விவசாயி தொடர்ந்து பேசும்போது, அண்ணா […]

செய்திகள்

தருமபுரி, நீலகிரியில் சோதனை: ரூ. 23 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சென்னை, மார்ச் 1– சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், ரூ.50,000 வரை எந்தவித ஆவணமின்றி பணத்தை எடுத்து செல்லலாம். அதற்குமேல் கொண்டு செல்லும் பணத்திற்கு கண்டிப்பாக ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். ரூ.3 லட்சம் பறிமுதல் இந்த […]

செய்திகள்

லாரி உரிமையாளர் கொடூர கொலை: தருமபுரியில் மூன்று பேர் கைது

தருமபுரி, பிப். 5– தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1ஆம் தேதி அன்று வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் வாகனத்தில் அடிப்பட்டு தலை, உடல் தனித்தனியாக சிதறிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்த மர்மான முறையில் இறந்து கிடந்தவரின் உடல் அருகில் ஒரு விசிட்டிங் கார்டு […]

செய்திகள்

தருமபுரி அருகே லாரி கவிழ்ந்து 18 எருமை மாடுகள் பலி

தர்மபுரி, ஜன. 1- சாலையோர வீட்டின் மீது மோதி லாரி கவிழ்ந்த விபத்தில் 18 எருமை மாடுகள் பலியாகி உள்ளது. ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 42 எருமை மாடுகளுடன் ஒரு லாரி, தர்மபுரி வழியாக சென்றது. லாரியை செல்வகுமார் (வயது 40) ஓட்டினார். கிளீனர் அசோக்குமார் (வயது 49) மற்றும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் உடன் வந்தனர். தொப்பூர் போலீஸ் சோதனைச்சாவடி அருகே லாரி சென்ற போது, எதிரே பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு பெயின்ட் ஏற்றிச்சென்ற […]