ஐந்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்த ஆட்கள் எல்லாம் கிராமத்தில் வந்து குவிந்தார்கள். தொடர் விடுமுறை என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம். உற்சாகம். காப்புக்கட்டில் ஆரம்பிக்கும் பொங்கல், காணும் பொங்கல் முடிவடையும் வரை அந்த ஊரே சந்தோசமாக இருக்கும். கட்டுக்கட்டாகக் கரும்புகள், வீட்டுக்கு வீடு பொங்கல் என்று யார் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் விருந்து போல சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற விருந்தோம்பலில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது. ஐந்து நாட்களுக்கும் ஐந்து புது […]
![]()




