செய்திகள்

மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகள்

சென்னை, ஜன.17- தமிழ்நாடு முழுவதும் 165 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கட்டமைப்பில், அருகாமை பள்ளி விதிகளின்படி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில், தற்போதுள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் செயல்பாடு உள்ளது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் 2022–23ஆம் ஆண்டு வரைவுத் திட்டத்தில் தற்போதுள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக […]

செய்திகள்

கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.680 கோடிக்கு மது விற்பனை

சென்னை, ஜன. 15– தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 3 நாட்களில் ரூ.680 கோடிக்கு மேல் மது விற்பனையாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பொங்கலுக்கு மறுநாள் இன்று திருவள்ளூவர் தினம் கடைபிடிக்கப்படுவதால் மதுக்கடைகள் மூடப்படும். இந்த ஆண்டு பொது ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுவதால் தொடர்ச்சியாக 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. நேற்று இரவு 10 மணியுடன் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. 2 நாட்கள் கடைகள் […]

செய்திகள்

தமிழ்நாடு மீனவர்கள் 12 பேர் விடுதலை: வவுனியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, ஜன. 5– இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 தமிழ்நாடு மீனவர்களில், 12 பேரடி விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து, தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர். இந்நிலையில், வவுனியா சிறையில் உள்ள 12 தமிழ்நாடு […]

செய்திகள்

இந்தியாவில் 578 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் இன்று காலை  நிலவரப்படி 578 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இன்று காலை  நிலவரப்படி ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 151 பேர் சிகிச்சைக்குப் பின்  ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 142 பேர், மகாராஷ்டிரா மாநிலத்தில் 141 […]

செய்திகள்

பள்ளிகளில் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை, டிச.6– பள்ளிகளில் வாரம் ஒருமுறை கட்டாயமாக நூலக பாடவேளைகளை நடத்தி, நூல் அறிமுகப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா குறைந்த பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் நூலக பாடவேளைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாடவேளைகளை, கட்டாயம் […]

செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி, டிச.6– புதுச்சேரியில் 20 மாதங்களுக்குப் பிறகு இன்று 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. ‌ அத்துடன் அரை நாள் மட்டுமே செயல்பட்டு வந்த 9 முதல் 12ம் வகுப்புகள், கல்லூரிகள் முழு நேரமாகவும் செயல்படத் தொடங்கின. புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 2020 மார்ச் மாதம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த செப்டம்பரிலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் […]

செய்திகள்

தற்கொலை நிகழ்வுகளில் தமிழ்நாடு 2 ஆவது இடம்: தேசிய குற்ற ஆவணப் பிரிவு அறிக்கை

சென்னை, அக். 30– 2020 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையில், தேசிய அளவில் தமிழ்நாடு 2 வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் தற்கொலை நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவணப் பிரிவு, தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. அதன்படி, கடந்த ஆண்டு (2020) நாடு முழுவதும் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து […]

செய்திகள்

புதிய வேலைவாய்ப்புகள்: முன்னணியில் தமிழ்நாடு

சென்னை, அக். 22– தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் 6.1 சதவீதம் வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 74 ஆயிரம் பேர் அமைப்பு சார்ந்த வேலைகளில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, வருங்கால வைப்பு நிதியத்தில் புதிதாக இணைவோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாதந்தோறும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு அதிகரிப்பு இதன்படி தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் 6.1 அளவு விழுக்காடு அமைப்பு […]

செய்திகள்

213 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் 1,200-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை, அக்.19- தமிழகத்தில் 213 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 1,200-க்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,200-க்கு கீழ் இருந்தது. ஆனால் அதன் பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் 213 நாட்களுக்கு பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் 1,200-க்கு […]

செய்திகள்

தமிழ்நாட்டில் 12 இடங்கள் உள்பட 23 இடங்களில் என்ஐஏ சோதனை

சென்னை, அக். 12– கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் காளிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அவருக்கு தொடர்புடைய 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 12 இடங்கள் தமிழ்நாட்டில் சிவகங்கை, கோவை, […]