விஜய் தலைமையில் நடைபெறுகிறது சென்னை, ஏப்.19- தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் நடிகர் விஜய் தலைமையில் 26, 27-ந் தேதிகளில் கோவையில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கட்சி கட்டமைப்புகளை பலப்படுத்துதல், கூட்டணி அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் தீவரம் காட்ட ஆரம்பித்துவிட்டன. அந்தவகையில் புதிதாக தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியானதும் தங்கள் கட்சி பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. […]