செய்திகள்

வாக்குப்பதிவு நாள் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஒருநாள் விடுப்பு

சென்னை, ஏப். 11– வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள், ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உட்பட பல்வேறு அரசு துறையை சேர்ந்தவர்களும் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அரசு விடுமுறைக்கு மாற்று வாக்குப்பதிவு நாளன்று அனைவருக்கும் தமிழக அரசு விடுமுறை […]

செய்திகள்

சென்னையில் பெண்களை விட ஆண்கள் 3% அதிக வாக்குப்பதிவு !

சென்னை, ஏப். 9– தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னைக்குட்பட்ட 16 தொகுதிகளில் ஆண்களே அதிகளவு வாக்குகளை பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சென்னைக்குட்பட்ட 16 தொகுதிகளில் ஆண்கள் 60.83 % அளவிற்கு வாக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் பெண்கள் 57.44% அளவிற்கே வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த 16 தொகுதிகளிலும் 12,13,000 ஆண் வாக்காளர்களும், 11,84,000 பெண் வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். […]

செய்திகள்

வாக்குப்பதிவில் முந்திய முதல்வர் வேட்பாளர்கள் யார்? தேர்தல் ஆணையம் வெளியீடு

சென்னை, ஏப். 7– 5 முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் எத்தனை சதவீத வாக்கு பதிவாகி உள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவின் முடிவில் 234 தொகுதிகளிலும் சேர்த்து 71.79% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தமிழகத்தில் 72.78% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறைந்த, […]

செய்திகள்

எடப்பாடி தொகுதியில் 85 சதவீதம்; கொளத்தூரில் 60 சத வாக்குப்பதிவு

சென்னை, ஏப். 7– தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகின என […]

செய்திகள்

கே.என்.நேரு மீது 5 பிரிவுகளில் வழக்கு

திருச்சி, ஏப்.6- சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தி.மு.க. முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு கடந்த 3-ந் தேதி முசிறியில் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பிற கட்சியினர் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்?, நாம் எவ்வளவு கொடுக்கலாம் என்றும், சர்ச்சைக்குரிய […]

நாடும் நடப்பும்

தமிழகத்தின் நலம் காக்க அண்ணா தி.மு.க. ஆட்சியே தொடர வேண்டும்

கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். இம்முறையும் சட்டமன்ற தேர்தலில் இரு முக்கிய போட்டியாளர்களாக இருப்பது அண்ணாதி.மு.க. கூட்டணியும், தி.மு.க. கூட்டணியும் தான். தேசிய கட்சிகளில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா அண்ணா தி.மு.க.வில் இணைந்து இருக்கிறது. நாடெங்கும் செல்லா காசாகி விட்ட காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் களத்தில் இருக்கிறார்கள். அண்ணா தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதாவுடன் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் […]

செய்திகள்

கோவையில் அசத்திய அமைச்சர் வாரிசு

கோவை, மார்ச்,31- திமுக நிர்வாகிகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் மகன் விகாஷ் தன் தீக்கக்கும் பேச்சால் அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளார். கோவை சுகுணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியின் மகன் விகாஷ் நேரடியாக களம் இறங்கி தலைமை ஏற்று இந்த போராட்டத்தை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ”  தமிழக முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் […]

செய்திகள்

மத்திய அரசுடன் இணக்கமான உறவு இருந்தால் தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும்:எடப்பாடி பழனிசாமி

விருத்தாசலம், மார்ச் 20– மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:– பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர். அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆசி பெற்று விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற பா.ம.க. கட்சியின் வெற்றி வேட்பாளார் […]

செய்திகள்

ஏப்ரல் 6–ந்தேதி தமிழகத்திற்கு பொது விடுமுறை

சென்னை, மார்ச்.17- சட்டசபை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதி தமிழகத்திற்கு பொது விடுமுறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–- தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) மாதம் 6-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, ஏப்ரல் 6-ந் தேதியை பொது விடுமுறை தினமாக தமிழக கவர்னர் […]

நாடும் நடப்பும்

முக கவசம் அணிகிறார், சமூக விலகலை கடைபிடிக்கிறார்

மனு தாக்கலின் போது பழனிசாமியின் எளிமை பாரீர் நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்க இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை படிப்படியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எடுத்த பல முடிவுகள் எல்லாத் தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஆனால் சமீபமாக ஒரே நாளில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 550 என்று இருப்பது அச்சத்துடன் பார்க்க வேண்டிய அம்சமாகும். தமிழகம் அடுத்த 20 நாட்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு […]