செய்திகள்

தமிழகம் முழுவதும் 1ந் தேதி வரை விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

சென்னை, ஏப். 24– பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்ட (பிஎம் கிசான்) பயனாளிகள் மற்றும் விடுபட்ட விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 1ந் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 38.25 லட்சம் விவசாயிகள் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) மூலம் பயனடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து பிரதம மந்திரியின் கௌரவ நிதி […]

செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு பரிசீலனை

சென்னை, ஏப்.17– பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும் வல்லுனர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும் அவர்களுக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். ஆனால், புதிய […]

செய்திகள்

கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு ரூ.302 கோடி மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை, மார்ச்.31- கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு ரூ.302 கோடி மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தீன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கூட்டுறவுத் துறை நடத்தும் நலிவுற்ற ரேஷன் கடைகளுக்கான 2019–20ம் ஆண்டுக்கான மானியத் தொகையின் முன்பணம் ரூ.150 கோடியை அனுமதிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடந்த 2020ம் ஆண்டில் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அந்தத் […]

செய்திகள்

ரமலான் மாத நோன்பு: பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரம் டன் பச்சரிசி வழங்கும் தமிழக அரசு

சென்னை, மார்ச் 25- ரமலான் மாத நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரம் டன் பச்சரிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-– நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2022–ம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய […]

செய்திகள்

பள்ளி மாணவிகளை அழைத்துப் பேசிய ஸ்டாலின்: அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி

சென்னை, மார்ச் 17- பள்ளி மாணவிகளை அழைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவடி இமாகுலேட் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் ஆர்.பிரியா, அம்பத்தூர் எபினேசர் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் கே.திவ்யா, ஆவடி நசரத் அகாடமியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோருடைய வீடியோ பதிவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து, அவர்களை தலைமை செயலகத்துக்கு அழைத்துப் பேசினார். மாணவிகளின் கோரிக்கை அப்போது மாணவிகள் […]

செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மேளா நடத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை, மார்ச் 13– மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மேளா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மாத உதவித்தொகையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் […]