செய்திகள்

தமிழகத்தில் நேற்று 1,218 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, அக்.18- தமிழகத்தில் 1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 27 ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 714 ஆண்கள், 504 பெண்கள் என மொத்தம் 1,218 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், கோவையில் 132 பேரும், […]

செய்திகள்

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை சென்னை, அக்.12- தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணிக்காலியிடங்களை பூர்த்தி செய்தல், வார்டு […]

செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, அக்.11 சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:– வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய திருநெல்வேலி பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி […]

செய்திகள்

6 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் 1400க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை, அக்.8- தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 1,400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் 1,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி கொரோனா பாதிப்பு 1,385 ஆக இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று, நேற்று மீண்டும் 1400-க்கும் கீழ் குறைந்தது. அந்த வகையில் நேற்று 1,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள […]

செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக காரிப் பருவத்தில் 45 லட்சம் டன் நெல் கொள்முதல்

தமிழக அரசு தகவல் சென்னை, அக்.5- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 2020–2021ம் ஆண்டு காரிப் சந்தைப்பருவத்தில் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் தலைமைச்செயலாளர் இறையன்பு, கூட்டுறவு, உணவு […]

செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று 4ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு சென்னை, அக்.3– தமிழகத்தில் 4ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது. 20 ஆயிரம் இடங்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டு செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் நடந்த […]

செய்திகள்

மேகதாது அணை பற்றி விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு

சென்னை, செப். 28– காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழகம் உட்பட 3 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தண்ணீரை உடனடியாக வழங்க கர்நாடகா மாநிலத்திற்கு ஆணையம் உத்தரவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் நேற்று (27–ந்தேதி) புது டெல்லியில் ஆணைய அலுவலகத்தின் கூட்ட அரங்கில் ஆணையத்தின் தலைவர் எஸ். கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் […]

செய்திகள்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதுடெல்லி, செப். 27– தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 4 மாதங்களுக்குள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட் முந்தைய உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடர்ந்து வருகின்றன. தற்போது, தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, […]

நாடும் நடப்பும்

சுற்றுலா சொர்க்க பூமி தமிழகம்!

இன்று உலகெங்கும் சர்வதேச சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையின் உத்தரவால் உருவான உலக சுற்றுலா அமைப்பு எல்லா நாடுகளிலும் சுற்றுலா பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசனைகள் மற்றும் நிதி உதவிகளும் செய்து வருகிறது. அந்த அமைப்பு தான் செப்டம்பர் 27–ந் தேதியை உலக சுற்றுலா தினமாக கொண்டாடுகிறது. சுற்றுலா என்ற பேச்சு ஆரம்பித்து விட்டாலே குடும்பத்தார் அனைவரும் புது உற்சாகத்துடன் ‘எங்கே போவது’ என பேச ஆரம்பித்து விடுவார்கள். சிறுவர்களும் பெரியவர்களும் தேர்வு செய்த பட்டியலைக் கொண்டு […]

செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை,செப். 19– தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, […]