சென்னை, டிச. 12– ஆவணப்படத்தில் அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதாக நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜனவரி 8–ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகை நயன்தாராவின் சிறு வயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாராபியாண்ட் தி பேரி டேல்’ என்ற ஆவணப்படம் கடந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதற்கு முன்பு வெளியான அந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் […]