செய்திகள்

கள்ளச்சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் அமல்

தண்டனை விவரங்கள் அறிவிப்பு சென்னை, ஜூலை 14- கள்ளச்சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டம் அமலுக்கு வந்ததுடன் தண்டனை விவரங்களையும் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, சட்டசபையில் 29.6.2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவுக்கு […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை: குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன்

முதல்வர் ஸ்டாலின் தகவல் சென்னை, ஜூலை 6– “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது […]

Loading