செய்திகள்

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 24 லட்சத்து 85,814 பேருக்கு தடுப்பூசி

சென்னை, செப். 27– தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 24 லட்சத்து 85 ஆயிரத்து 814 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நேற்று மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு மற்றும் பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் நான்கைந்து இடங்களில் முதலமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அதுபோன்று அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் […]

செய்திகள்

குஜராத்தில் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்ய தடுப்பூசி கட்டாயம்

அகமதாபாத், செப். 20– குஜராத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே தடுப்பூசியின் மீதுள்ள அச்சத்தை போக்கி, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தும் நோக்கில், குஜராத்தின் அகமதாபாத்தில் மக்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையாவது செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்தாதவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ அல்லது கன்காரியா ஏரி முகப்பு, சபர்மதி ஆற்றங்கரை, நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வளாகம் போன்ற பொது இடங்களுக்கு […]

செய்திகள்

ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி:மோடி பிறந்த நாளை தினமும் கொண்டாடுங்கள்-ப.சிதம்பரம்

டெல்லி, செப்.18– பிரதமர் மோடியின் பிறந்த நாளை தினமும் கொண்டாடுங்கள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்திருக்கிறார். பிரதமர் மோடியின் 71வது பிறந்ததினத்தை யொட்டி அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக ஒன்றிய அரசு செய்துவந்தது. அதன்படி, இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரவு எட்டு மணிவரை நீடிக்கப்பட்ட தடுப்பூசி முகாம் நிறைவில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி […]

செய்திகள்

வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை, செப்.14- வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:- தமிழகத்தில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் அமைக்க தேவையான தடுப்பூசி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மெகா தடுப்பூசி […]

செய்திகள்

ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி: தமிழக அரசு புதிய சாதனை

சென்னை, செப்.13- கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு நேற்று புதிய சாதனை படைத்தது. ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பரவலை தடுப்பதற்கு ஒரே வழி கொரோனா தடுப்பூசி என்பதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் போலியோ சொட்டு மருத்து போடும் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் […]

செய்திகள் நாடும் நடப்பும்

மாணவர்களின் ஆரோக்கியம்!

தலையங்கம் நாளை தமிழக அரசு அனைத்து பள்ளி வகுப்புகளுக்கும் கல்லூரி வகுப்புகளுக்கும் மாணவர்கள் மீண்டும் நேரில் வருவது பற்றிய முடிவை அறிவித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவருக்கு தடுப்பூசி தருவது பற்றி உலக சுகாதார அமைப்பு எந்த கட்டளையையும் இதுவரை பிறப்பிக்காததால் எல்லா நாடுகளுமே தயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. மூன்றாம் அலை என கொரோனா தொற்று பரவல் வந்தால் சிறுவர்கள் தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்று நாடெங்கும் அச்சம் பரவி இருக்க காரணம் கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு […]

செய்திகள்

12ந்தேதி 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி: அமைச்சர்

சென்னை, செப். 5– வரும் 12 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைத்து அதற்கான பணிகள் நடைபெற உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்ன சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:– தற்போது நிபா வைரசின் தாக்கம் குறித்து நாங்கள் அறிந்த உடனேயே தமிழ்நாடு – கேரளா இடையேயான 9 […]

செய்திகள்

தடுப்பூசி செலுத்திய மாணவர்கள், பேராசிரியர்களுக்கே கல்லூரியில் அனுமதி

அமைச்சர் பொன்முடி தகவல் சென்னை, ஆக.28– செப்டம்பர் 1-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தொற்றுப் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி […]

செய்திகள்

தமிழ்நாட்டில் இனி 24 மணி நேரமும் தடுப்பூசி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார் சென்னை, ஆக. 22– தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை சென்னையில் தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன், மற்ற 37 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் அறக்கட்டளை சார்பில் 2 கோடியே 36 […]

செய்திகள்

தடுப்பூசி போட்டவர்களையும் டெல்டா வகை வைரஸ் தாக்கும்: ஐசிஎம்ஆர்

டெல்லி, ஆக. 19– உருமாறிய டெல்டா வகை வைரஸ், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என்பது ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் 25 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 35,178 ஆகவும், இன்று மீண்டும் பாதிப்பு 36,401 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 440 ஆக இருந்த நிலையில், இன்று 530 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையும் […]