செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

சென்னை, மே 6– தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி இன்று மாலை வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே 60,03,590 கோவிஷீல்டு டோஸ்கள், 10,82,130 கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் […]

செய்திகள்

சென்னை வந்தடைந்தது 75,000 கோவாக்சின் தடுப்பூசிகள்

சென்னை, மே 4– ஐதராபாத்திலிருந்து 75,000 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது. […]

செய்திகள்

தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை வரை தொடரும்: சீரம் நிறுவன நிர்வாகி தகவல்

லண்டன், மே 3– இந்தியாவில் ஜூலை மாதம் வரை தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலையில் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் லண்டனில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்த அதார் பூனாவாலா கூறியதாவது:- தற்போது மாதம் ஒன்றுக்கு சீரம் நிறுவனம் 6 முதல் 7 கோடி தடுப்பூசி டோஸ்களை மட்டுமே தயாரித்து வருவதால் […]

செய்திகள்

4 மணி நேரத்தில் 1 கோடி பேர் தடுப்பூசிக்கு முன்பதிவு

டெல்லி, ஏப். 29– 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு முதல்நாளில் 4 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. நிமிடத்துக்கு 27 லட்சம் பேர் இந்நிலையில், மின்னணு மற்றும் தகவல் […]

செய்திகள்

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ‘மாஸ்க்’ அணியாமல் செல்ல அனுமதி

நியூயார்க், ஏப். 28– தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி ‘மாஸ்க்’ அணிய தேவையில்லை என்று, அமெரிக்காவின் சிடிசி நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி, முகக்கவசங்களுக்கான வழிகாட்டுதல்களில் நேற்று தளர்வுகளை அளித்தது. அதன்படி, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, திறந்த வெளியில், சிறிய அளவு மக்கள் கூடும் இடங்கள், சிறிய கூட்டங்களை உடைய பொது நிகழ்வுகள் […]

செய்திகள்

தமிழ்நாடு, உ.பி., சத்தீஸ்கரை தொடர்ந்து டெல்லியிலும் தடுப்பூசி இலவசம்

டெல்லி, ஏப். 26– அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை இது போன்ற பல புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த மே 1 முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி […]

செய்திகள்

தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசி வழங்குங்கள்: பிரதமருக்கு எடப்பாடி கடிதம்

சென்னை, ஏப்.23– தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றைத் தடுக்க 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் பிப்ரவரி 2021 இறுதிவரை தமிழகத்தில் கொரோனா சதவீதம் தொடர்ந்து குறைந்து வந்தது. இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வந்தது. மொத்த தொற்று எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இருப்பினும், தேசிய அளவில் தொற்று மீண்டும் அதிகரித்ததற்கு ஏற்ப, […]

நாடும் நடப்பும்

ஆயூஷ் அமைச்சகத்தை விழிப்புடன் செயல்பட தவறி விட்டார் மோடி

சித்த, ஓமியோ மருத்துவ சிறப்புகளை உணர்வோம் நாடெங்கும் கொரோனா பெரும் தொற்றின் பரவல் சுனாமி அலை போல் பெருகி வருவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. பங்குச்சந்தை குறியீடும் வீழ்ச்சியை கண்டு வருவது நாம் சந்திக்க இருக்கும் பொருளாதார ஆபத்துக்களை தான் சுட்டிக் காட்டுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில் மருத்துவ வசதிகளுக்குத் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. பல இல்லங்களில் ஒரே சமயத்தில் குடும்பத்தார் அனைவரும் […]

செய்திகள்

அக்டோபர் மாதத்திற்குள் 5 புதிய தடுப்பூசிகள்

புதுடில்லி, ஏப்.12– இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 5 புதிய தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ என்னும் 2 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக ரஷ்யாவின், ‘ஸ்புட்னிக் – வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாவாக்ஸ், சைடஸ் கடிலா, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல்’ ஆகிய 5 தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி […]

செய்திகள்

மெரினாவில் நடைபயிற்சிக்கு அனுமதிப்பது பற்றி ஆலோசனை: கமிஷனர் பேட்டி

சென்னை, ஏப். 10– மெரினா கடற்கரையில் காலையில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது குறித்தும் கடற்கரைகளில் காலையில நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடப்பதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை பாலவாக்கத்தில் இன்று வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளிட்ட […]