செய்திகள்

தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர்

சென்னை, ஜூலை 5– தமிழ்நாட்டில் தற்போது கையிருப்பில் தடுப்பூசிகள் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். வணிகர்களுக்கு தடுப்பூசி பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் , இன்று முதல் 5 நாட்களுக்கு வணிகர்களுக்கான தடுப்பூசி […]

செய்திகள்

ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 71 லட்சம் தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஜூலை.1- ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டுக்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்றும் தினசரி 8 லட்சம் தடுப்பூசிகள் போடும் அளவுக்கு மருத்துவ கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேடு இந்திய அரசின் மருந்து கிடங்கில் இருந்து 2.50 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன், மருத்துவம் மற்றும் […]

செய்திகள்

5 கோடி தடுப்பூசிகள் தயார்: மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் பைசர்

புதுடெல்லி, மே 27– 5 கோடி தடுப்பூசி டோஸ்களை தருகிறோம் விரைந்து அனுமதி அளியுங்கள் என்று இந்திய அரசிடம் அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘பைசர்’ கோரிக்கை வைத்துள்ளது. அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘பைசர்’ தனது தடுப்பூசிக்கு விரைந்து அனுமதி அளிக்குமாறு இந்திய அரசிடம் கோரியுள்ளது. ஜூலை -– அக்டோபர் காலக்கட்டத்தில் 5 கோடி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வழங்கத் தயாராக இருக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் பௌர்லா இந்திய அரசிடம் கூறியதாவது: மத்திய அரசு […]

செய்திகள்

ஏழை நாடுகளுக்கு 6 வாரத்தில் 8 கோடி தடுப்பூசிகள்-அமெரிக்க அதிபர் அறிவிப்பு

நியூயார்க், மே 18– ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு 6 வாரத்தில் 8 கோடி தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. அதன் இரண்டாவது அலை படு வேகமாகப் பரவி வரும் நிலையில், பாதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.37 கோடியைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் […]

செய்திகள்

தடுப்பூசிகள் பற்றாகுறை: பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்

டெல்லி, ஏப். 19– இந்தியா இதுவரை எதிர்கொள்ளாத அவசர நிலையை தற்போது எதிர்கொண்டு வருவதால், பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை கூறி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவல் , தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக, முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:– இந்தியாவில் உள்நாட்டு தடுப்பூசி குறைவாக இருப்பதால், ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) அல்லது யு.எஸ். எப்.டி.ஏ போன்ற நம்பகமான நிறுவனங்களால் […]