சென்னை, செப். 6– சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.53,760 க்கு விற்கப்படுகிறது. தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கணிசமாக ஏற்றம் கண்டுள்ளதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப கடந்த மாதம் மட்டும் ரூ.5,000 வரை தங்கம் விலையும் குறைந்தது. […]