செய்திகள்

சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை துவக்கம்

சென்னை, பிப்.27– சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறையை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் வெ.இறையன்பு ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு ஆணையாளர் கோ.பிரகாஷ் தலைமை வகித்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்தும் பணியை சென்னை சீர்மிகு நகரம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது. […]