தலையங்கம் மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பதற்றத்தின் பின்னணியில், லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலைமை “விரைவாக மோசமடையக் கூடும்” என்று கூறியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மியும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜோர்டான் வெளியுறவு அமைச்சகமும் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது, லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறும், மற்றவர்கள் அங்கு பயணிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. லெபனானுக்குச் செல்வதற்கு எதிரான தற்போதைய எச்சரிக்கையின் […]