செய்திகள்

டெல்லியில் ஒரு வார பொது முடக்கம் நீட்டிப்பு

டெல்லி, மே 16– டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார். டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிய இருந்த நிலையில், 24ஆம் தேதி காலை 5 மணி வரை அந்த முழுக் ஊடகத்தை நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரை தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் […]

செய்திகள்

டெல்லியில் கொரோனாவால் ஒரே நாளில் 348 பேர் உயிரிழப்பு

டெல்லி, ஏப். 24– டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,331 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 348 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் இந்திய அளவில் 3,32,730 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 24,331 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 348 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெல்லியில் தற்போது 92,000 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

செய்திகள்

டெல்லியில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு : சாலைகள் வெறிச்சோடின

புதுடெல்லி, ஏப்.20– டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு 10 மணி முதல் 26–ந்தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் தொடர்ந்து கொரோனாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கெனவே டெல்லி […]

செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பால் நீதிபதி உயிரிழப்பு

புதுடெல்லி,ஏப்.20– டெல்லியில் கொரோனா வைரசால் பாதிப்பட்ட நீதிபதி வேணுகோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள், நீதித்துறையினர், அரசியல் கட்சியினர் உள்பட அனைத்து தரப்பினரும் தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் டெல்லியில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்டு வருபவர் கோவை வேணுகோபால். 47 வயதான அவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி லோக் […]

செய்திகள்

திரவ ஆக்சிஜனை கொண்டு செல்ல ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரெயில் சேவை

டெல்லி, ஏப். 19– மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜனை ரெயில்களில் எடுத்துச் செல்வதற்கு ரெயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான செயற்கை ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை திரவ நிலையில், ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தன. ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ அதனை ஏற்ற ரயில்வே நிர்வாகம், திரவ ஆக்சிஜனை உறைநிலைக்குக் கீழான […]

செய்திகள்

டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

மும்பை, ஏப். 15– ஐ.பி.எல். டி20 போட்டியில் இன்று மும்பையில் நடைபெறும் 7வது ஆட்டத்தில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடந்த ராஜஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்வதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் டெல்லி அணி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியிருப்பதால், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் என […]

செய்திகள்

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு: முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி, ஏப்.11– ஊரடங்கில் எனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார். டெல்லியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– கொரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்புகளை நீக்குவது குறித்து நான் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை […]

செய்திகள்

14வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, ஏப். 8– 14வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராதால் 6 […]

செய்திகள்

டெல்லியில் இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு !

டெல்லி, ஏப். 6– டெல்லியில் கொரோனாவின் நான்காவது அலை தொடங்கியதைத் தொடர்ந்து, இன்று முதல் ஏப்ரல் 30 ந்தேதி வரை, இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இந்திய அளவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதிலும் இதுவரை 12,686,049 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 165,577 பேர் கொரொனாவால் உயிழிந்துள்ளனர். இரவு ஊரடங்கு டெல்லியில் கொரோனாவின் நான்காவது அலை தொடங்கிய நிலையில், […]

செய்திகள்

டெல்லியில் 101 வது நாளில் விவசாயிகளின் போராட்டம்

டெல்லி, மார்ச் 6– புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை ஒழித்துக்கட்டுவதுடன், தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் கையேந்தி நிற்கச்செய்து விடும் என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். […]