வாழ்வியல்

நிலவேம்புக் குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகும்

“டெங்கு மட்டுமல்லாது எல்லாக் காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் குடிப்பது பலன் தரும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நிலவேம்புக் குடிநீர் அருமருந்தாகும். காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமல்லாது, அனைவருமே நிலவேம்புக் குடிநீர் குடிக்கலாம். கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தாராளமாகக் குடிக்கலாம். நிலவேம்புக் குடிநீரை சாப்பாட்டுக்கு முன் குடிப்பது சிறந்தது. நிலவேம்புக் குடிநீர், யார் எவ்வளவு குடிக்க வேண்டும்? நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாகக் குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து […]

வாழ்வியல்

டெங்கு காய்ச்சலுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது?

“டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் (Paracetomol) மாத்திரையும், உடல் வலியைப் போக்க உதவும் மாத்திரைகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே `அதிர்ச்சி நிலை’ (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். […]

வாழ்வியல்

நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்

டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் மீண்டும் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்க என்ன செய்யலாம்? டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் தொடர்ந்து 3 முதல் 5 நாள்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டும். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யலாம். மீண்டும் டெங்கு தொற்றுள்ள கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய […]

வாழ்வியல்

டெங்குவுக்கு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?

டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ ஏற்படலாம். அதாவது தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்தத் தருணத்தில் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. எனவே மருத்துவக் கண்காணிப்பிலிருந்து உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலை ஏற்படாமல் காப்பாற்ற […]

செய்திகள்

மும்பையிலிருந்து வந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம்

சென்னை, பிப்.23- தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 100 பேரில் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மும்பையிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 8-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை இயக்குனர் […]

வாழ்வியல்

டெங்கு காய்ச்சல் என்பது என்ன?

“டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என டெங்குவில் 4 வகைகள் உள்ளன. டெங்கு எப்படிப் பரவுகிறது? நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி’ (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்’ கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் […]

வாழ்வியல்

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

டெங்கு காய்ச்சல் மொத்த தமிழகத்தையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. டெங்கு காய்ச்சல் பரவி`அபாயக் கட்டத்தில் கொண்டு வந்ததால் காப்பாற்ற முடியவில்லை’ என்று மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. 19- ம் நூற்றாண்டில் அதிகமாகப் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பிரதான பிரச்னையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக டெங்கு தாக்கம் நிலவி வருகிறது. தீவிரமழை தொடங்கும் முன்பே, பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அச்சுறுத்தி வந்தது. சென்னையில் அரசு மருத்துவமனைகளில் […]