செய்திகள்

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி டுவீட்

டெல்லி, அக். 14– முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மன்மோகன் சிங் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சீராக உள்ளது இந்நிலையில், அவர் காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவருக்கு தேவையான ஊட்டச்சத்து, […]

செய்திகள்

நண்பர்களை விமர்சித்தால்தான் பிரதமர் மோடிக்கு கோபம் வரும்: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி, அக். 10– பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது உண்டு. அந்த வகையில் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது […]

செய்திகள்

ராகுல்காந்தி மீதான வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்

மதுரை, ஆக. 28– பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிந்த ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிய மனு, செப்டம்பர் 3 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில், பட்டியலினத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்வது […]

செய்திகள்

அரசியல் செயல்பாட்டில் டுவிட்டர் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி, ஆக. 13– இந்திய ஜனநாயகத்தின் மீது டுவிட்டர் நிறுவனம் தாக்குதல் நடத்துவதுடன், எங்களின் அரசியல் செயல்பாட்டிலும் டுவிட்டர் தலையிடுகிறது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அது போக்சோ சட்டப்பட தவறானது என்று கூறியவுடன், ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். ஆனாலும் அவரின் டுவிட்டர் கணக்கை நிறுவனம் முடக்கியது. […]